தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

குலதெய்வம்

சித்தர் காரைப்பெரிய நாயனார் திருபெருந்துறை
R Swaminatha Pillai (திருப்பெருந்துறை)

valliammai (வள்ளியம்மை)

R Swaminatha Pillai , the first son of Kathamuthu Pillai His family, which belongs to the (வீரகோடி வேளாளர்) caste, hails from Tirupperunturai ( Avudayar Koil).Pillai has two younger brother and two younger sisters. The brother, Tirupperunturai Ramasamy Pillai ,Paryaya Pillai

Rs Kathamuthu Pillai,


வெள்ளாளர்களின் குலதெய்வம்

மாசி பெரியண்ணன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலிகருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் இருக்கும்அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடிஉயரமுள்ள வேங்கைஎன்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன்அமர்ந்திருக்கிறார். கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாகவிளங்குகிறது.

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின்பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார்.

கல்லாத்துக் கோம்பு

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்தகாமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்குசென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும்செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன்இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில்தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையைசிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம்கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும்கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.

திருநாவுக்கரசு சுவாமிகள்


கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.


வேண்டுதல்கள்
  • பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டிபெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
  • தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில்குத்துகின்றனர்.
  • உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
  • ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
  • படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
  • கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும்செய்கிறார்கள்.
  • மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில்கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.
செல்லும் வழி

நாமக்கலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில்சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும். அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்லவேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும்வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.


சோழிய வெளாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்ததுபிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டியவேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடிவேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத்தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழிபெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் எனஅழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்துதங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசைவேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம்பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர்குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக்கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்துபிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத்தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழியவேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம்அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனதுகாவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்துவரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள்மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாதுஅவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாதசாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்துவர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள்இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன்முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாததனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகலஅறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்துவைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழியவேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்குமணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன்நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்துகௌரவித்தாராம்.

பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளானசேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்துகுமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர்தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள்சோழிய முகம்மதியர்கள்என்றுஅறியப்பட்டனர்@ அல்லது பொதுவாகசோழியர்’ (சோழதேசம் என்றுஅழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம்மதத்தினைசோழியஎன்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப்பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூகவழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்


சோழியர் எனும் சொல்லானதுசோழதேசம்என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின்மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கிலஅகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர்சோழம் எனும்அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆனஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப்பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும்போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச்சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத்தோழர் ஒருவரைச்சோழியஎன்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழதேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப்பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில்தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர்காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.


'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிதுவேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர்அங்கமாக உள்ளது.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப்பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ளகி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச்சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில்இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில்உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும்கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில்ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர்சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது.

சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும்சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும்முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச்சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச்சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளைஉய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில்சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம்திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச்சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில்பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.